ராஜபாளையம் நகரசபை கூட்டம்

ராஜபாளையம் நகரசபை கூட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் நகரசபை கூட்டம்
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சியின் அவசர கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல், அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் செலவினங்கள், மலையடிப்பட்டி 60 அடி சாலையில் பாலம் கட்டுமானங்கள் ஏற்பது குறித்து மொத்தம் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய 31-வது வார்டு கவுன்சிலர் ராதா, தன்னுடைய பகுதியில் நடந்து வரும் சாலை திட்ட பணிகள் முன்அறிவிப்பு இல்லாமல் மக்கள் கருத்து கேட்காமலும் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே சாலை பணிகளை கை விட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நகராட்சி அதிகாரிகள் சாலை திட்ட பணிகள் முறையாக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு இன்றி செயல்படுத்தி வருவதால், பணிகளை கை விட முடியாது என அதிகாரிகள் பதிலளித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com