

ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கல்பனா, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை கூட்டத்தில் விவாதித்தனர். இதில் நகராட்சி நுண் உர கிடங்கு மாற்றி அமைப்பது பற்றியும், சத்திரப்பட்டி சாலையிலிருந்து பச்சமடம் வரை 60 அடி ஸ்கீம் ரோடு குறித்தும், நாய் தொல்லைகள் குறித்தும், சுகாதார பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பினர். தாமிரபரணி குடிநீர் குழாய் வினியோகத்திற்கு மீட்டர் பொருத்துவது குறித்தும் விவாதம் நடைபெற்றது. நகரசபை தலைவர் அதிகாரிகளின் விளக்கம் கேட்டு பொதுமக்களின் பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.