யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 2வது இடம் பிடித்த ராஜேஸ்வரி சுவே: செல்வப்பெருந்தகை வாழ்த்து

யு.பி.எஸ்.சி. நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி சுவே இந்திய அளவில் 2வது இடம் பிடித்துள்ளார்.
யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 2வது இடம் பிடித்த ராஜேஸ்வரி சுவே: செல்வப்பெருந்தகை வாழ்த்து
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி சுவே இந்திய அளவில் 2-ம் இடத்தையும், ராஜா முகைதீன் 7-ம் இடத்தையும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை ஆட்சியராக கடினமான பணிச்சூழலுக்கிடையிலும் விடாமுயற்சியுடன் படித்து இந்திய அளவில் 2-ம் இடத்தைப் பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கு மிகுந்த பெருமையாகும். இவர்களின் இந்த சாதனை, இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.

எதிர்காலத்தில் மேலும் பல உயரிய சாதனைகள் படைத்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com