

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
ரஜினிகாந்துக்கு தமிழ் நாடு முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்களும், பதிவு செய்யப்படாமல் சுமார் 30 ஆயிரம் மன்றங்களும் உள்ளன. இந்த மன்றங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பு ஆக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் ரஜினி மன்றம் தொடங்கப்படுவதாக ரஜினி அறிவித்தார். அந்த மன்றங்களில் உறுப்பினர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் இணைய தளம் மற்றும் செல்போன் மூலம் சேர வசதி செய்யப்பட்டது.
இணைய தளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முதல் ஒரு வாரத்தில் 1 லட்சம் பேர் ரஜினியின் கட்சியில் இணைந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து உள்ளது. ரஜினி மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 1 கோடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 10 பேர் கொண்ட குழுவை ரஜினி உருவாக்கி இருக்கிறார். அந்த குழுவினர் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து ரஜினி ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர்.
முதல் கட்டமாக ரஜினி நியமித்த குழுவினர் வேலூர் மாவட்டத்தில் கடந்த 19-ந்தேதி ஆலோசனை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அவர்கள் ரஜினியின் புதிய கட்சியை எப்படி வலிமையாக செயல்பட வைப்பது என்று ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகள் ரஜினிகாந்த் ஒப்புதலுடன் நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்ட செயலாளராக சோளிங்கர் என்.ரவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட இணை செயலாளராக ஆர்.நீதி என்ற அருணாசலம், மாவட்ட துணை செயலாளர்களாக வாணியம்பாடி ஜி.கணபதி, பொய்கை பி.ராஜன்பாபு, முகமது எஸ்.கலிபா அறிவிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் அணி செய லாளராக பி.அருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக சி.சங்கீதாவை ரஜினி தேர்வு செய்து பதவி கொடுத்துள்ளார். இவர் வக்கீலுக்கு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தக்கட்டமாக சென்னைக்கும் ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களிலும் ரஜினி மன்றம் முழுமையாக நிர்வாகிகளை பெறும். இதுகுறித்து ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், இனி வாரம் தோறும் மாவட்ட நிர்வாகிகள் பற்றிய விவரம் வெளியாகும் என்றார்.
மாவட்ட நிர்வாகிகளை நியமித்த பிறகு ரஜினி ஒப்புதலுடன் கிளை, வார்டு, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்துக்கும் நிர்வாகி களை நியமனம் செய்ய ரஜினி கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். இந்த மாத இறுதிக்குள் ஓரளவு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு விடுவார்கள்.
புதிய நிர்வாகிகள் நியமிக் கப்படும் போது பெண் களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்க ரஜினி மன் றம் மூலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக ஊராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி வார்டுகளில் பெண் களுக்கு அதிக பிரதிநிதித்து வம் கொடுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்கள் மூலம் தான் ரஜினி கட்சியின் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடியும் என்றும், ரஜினியின் முக்கிய கொள்கைகளை அடிமட்டம் வரை ஊடுருவி கொண்டு சேர்க்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மாநில, மாவட்ட அளவில் மகளிர் அணிக்கு ரஜினி கட்சியில் முக்கியத் துவம் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருச்சியில் ரஜினி மன்றத் தில் ரஜினி மக்கள் மகளிர் மன்றம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று மகளிர் மன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருச்சியில் பெண்களாக இணைந்து ரஜினி மக்கள் மகளிர் மன்றம் துவங்கி உள்ளனர். இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி தாரநல்லூர் கல்மந்தை காலனி பகுதியில், நேற்று சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள், ஒருங்கிணைந்து மன்ற அலுலகத்தை துவங்கியுள்ளனர்.