ரஜினியும் நானும் போட்டி போடுவோம்; பொறாமைபட்டது கிடையாது: கமல்ஹாசன்

விஜய் ஆட்சியை கண்காணிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.
ரஜினியும் நானும் போட்டி போடுவோம்; பொறாமைபட்டது கிடையாது: கமல்ஹாசன்
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

செய்யோன் தொடக்க விழாவுக்காக வந்துள்ளேன். அது நல்லபடியா நடக்கனும்; நீங்கள் அதை நல்லபடியா நடத்தி கொடுக்க வேண்டும். எப்போ மதுரைக்கு வந்தாலும் இந்த அன்பு சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் சந்தோஷம்.

2 நாட்களில் சொல்லக்கூடியது ஜோதிடமாக மட்டும்தான் இருக்க முடியும். ஆகையால் விஜய்யின் ஆட்சி குறித்து தற்போது கருத்து கூற முடியாது. புதியவர்களுக்கு 6 மாதம் டைம் கொடுக்க வேண்டாமா?; புதியவர்களை கம்மியாகவும் எடை போட வேண்டாம்; அதிகமாகவும் எதிர்பார்க்க வேண்டாம். மக்கள்தான் விஜய்க்கு வாக்களித்தார்கள். அவர்கள்தான் ஆட்சியை கண்காணிக்க வேண்டும்; நாங்களும் கண்காணிப்போம்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் இருந்து தமிழில் பேசக்கூடியவர் ஒருவர் கட்சி ஆரம்பித்தால் அது திராவிடக் கட்சிதான். நாங்கள் சினிமா துறையில் இருக்கிறோம். நாங்கள் (ரஜினிகாந்தும், கமலும்) போட்டி போடுவோம், பொறாமை பட்டது கிடையாது. கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படிதான் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்காதது குறித்த கேள்விக்கு “உங்களை போலதான் பார்க்கிறேன்; வேடிக்கை பார்க்கிறேன்” என கமல்ஹாசன் பதில் அளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com