அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்:-

வாழ்த்துகிறேன் தம்பி. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதை பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், 3 தலைமுறை அனுபவம் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.

கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:- தி.மு.க.வுக்கு இளைஞர்களை அணி திரட்டுவதில் சாதனை படைத்த அவர், இளைஞர் நலன் சார்ந்த துறையிலும், விளையாட்டு மேம்பாட்டு துறையிலும் பல அரிய சாதனைகளை நிச்சயம் படைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தகைய பொறுப்பை ஏற்பதின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உரிய பங்கை ஆற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் பணி சிறக்க வாழ்த்துகள்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் அமைச்சரவையில் ஒரு அங்கமாகி, அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார். தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கனிமொழி எம்.பி.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.:- இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கவிஞர் வைரமுத்து, நடிகர் கருணாஸ், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com