எஸ்.பி.வேலுமணி மகன் விகாஸ்- தீக்ஷனா தம்பதிக்கு ரஜினி நேரில் வாழ்த்து


எஸ்.பி.வேலுமணி மகன் விகாஸ்- தீக்ஷனா தம்பதிக்கு ரஜினி நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 29 April 2025 2:21 PM IST (Updated: 29 April 2025 3:58 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.பி.வேலுமணி மகன் விஜய் விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3ம் தேதி நடைபெற்றது

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார்.

ஆனால் படப்பிடிப்பு காரணமாக ரஜினிகாந்தால் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் , இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு சென்று மகன் விகாஸ்- தீக்ஷனா தம்பதிக்கு ரஜினி வாழ்த்துக்களை தெரிவித்தார் .

1 More update

Next Story