ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - கவர்னர் கூறிய முக்கிய தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - கவர்னர் கூறிய முக்கிய தகவல்
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கெலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கவர்னர் மாளிகையில் மூத்த பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒருவரை விடுதலை செய்திருப்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு தான் அதிக அதிகாரம் இருப்பதாகவும், ராஜீவ் கெலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை எனவும் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை நடத்திய இது பேன்ற முக்கிய வழக்குகளில், தலையிடும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே இருப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com