

சென்னை,
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், வடகிழக்கு மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
தமிழகத்தில் மொத்தம் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டைன் ரவீந்திரன் ஆகியோரும், தேமுதிக சார்பாக சுதீஷ் போட்டியிட உள்ளனர். அதிமுக சார்பில் எம். தம்பிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு இடம் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.