இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய ராணுவத்தின் தியாகம், வீரம், அர்ப்பணிப்பை போற்றும் வகையில் பேரணி நடத்தப்படுவதாக மு.க.ஸ்டலின் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கும். வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம். முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com