ராம நவமி விழா

கட்டணஞ்செவல் கிராமத்தில் ராம நவமி விழா நடைபெற்றது.
ராம நவமி விழா
Published on

தாயில்பட்டி, 

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கட்டணஞ்செவல் கிராமத்தில் கம்மவார் உறவின் முறை சார்பில் ராம நவமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து ராமர், சீதை, கண்ணபிரான், பாமா, ருக்மணி தேவி, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவீதி உலா நடந்தது. 2-வது நாள் விழாவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பஜனை கோவிலில் இருந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் வரை ராமர், சீதா, கண்ணபிரான், பாமா, ருக்மணி, அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துடன் நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் நடந்தது. இதனை பி.எஸ். ஆர். பொறியியல் கல்லூரி தாளாளர் சோலைச்சாமி தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com