"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்

"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" என்று தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்
Published on

சென்னை,

ரமலான் நேன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலேசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கெண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், 5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் என்றார்.

இவை வரும் 19ஆம் தேதிக்குள் தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com