ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து - ஐகோர்ட் தீர்ப்பு

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து - ஐகோர்ட் தீர்ப்பு
Published on

சென்னை,

கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், மாமல்லபுரத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, ஆகியோர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com