ராமதாஸ் நலமுடன் உள்ளார் - மருத்துவர் பேட்டி

ராமதாஸ் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் நலமுடன் உள்ளார் - மருத்துவர் பேட்டி
Published on

சென்னை,

அதன்படி, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் நேற்று பிரசாரத்தை முடித்து விட்டு இறங்கிய போது மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்த ராமதாஸை அவரது கட்சி தொண்டர்கள் தாங்கி பிடித்தனர். உடனடியாக சேலம், குரங்குச்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு சீலநாயக்கன்பட்டியில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சேலம் மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமதாஸ் நலமுடன் உள்ளார் என்றும், 2 நாட்கள் ஓய்வுக்கு பின்பு மீண்டும் பரப்புரைக்கு போகலாம் என்றும் மருத்துவர் ராஜேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com