ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முதலில் சிபிஐ, சிபிசிஐடி என புலனாய்வு பிரிவினர் விசாரித்தும் குற்றவாளி யார் எனத் தகவல் கிடைக்கப்பெறவில்லை.

இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் ராமஜெயத்தின் சகோதரர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாததால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு விசாரணை செய்து வந்தது. இதில், இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வாதிடுகையில் இதுவரை 1040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு. விரைவில் வழக்கை முடித்துவைக்க வேண்டும் எனவும், விரைவில் வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com