

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராஜ்குமார் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மின்னல் தாக்கியது. இதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ராஜ்குமார் லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.