

ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் காணாமல்போன 5 வயது சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தில் பசும்பொன் நகரில் உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, 5 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனார். இந்நிலையில் பக்கத்து வீட்டு கிணற்றில் அந்த சிறுமி சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கிணற்றில் இருந்த சிறுமியின் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சிறுமியின் குடும்பத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.