ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் உட்கோட்டம், பஜார் காவல் நிலைய சரகம், வழிவிடுமுருகன் கோவில் அருகே, கடந்த 30.08.2022 அன்று பெருமாள் மகன் முத்துக்குமாரை தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடியைச் சேர்ந்த சின்னப்பாண்டி மகன் துரைப்பாண்டி பீர் பாட்டிலால் குடிபோதையில் அடித்துள்ளார். இதில் தலையில் காயமடைந்த முத்துக்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக, பஜார் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, துரைப்பாண்டி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (25.04.2025) முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகபூ அலிகான் தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் துரைப்பாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணையை சிறப்பாக கையாண்டதற்காக வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளையும், நீதிமன்ற காவலரையும் மாவட்ட எஸ்.பி. சந்தீஷ் பாராட்டினார்.






