கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஏராளமான படகுகளை மீன் பிடிக்க விடாமல் படகுகளை நோக்கி தாக்கி உள்ளனர். இதையடுத்து குறைவான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

தொடரும் சம்பவம்

இது பற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது:-

ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை நிம்மதியாக மீன் பிடிக்கவிடாமல் இலங்கை கடற்படை தாக்கி விரட்டிக்கும் சம்பவம் தொடர்கிறது. இதனால் ஒவ்வொரு படகிலும் இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் வழக்கத்தை விட குறைவாகவே கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com