

திருச்சி,
இன்று முதல் நவீன மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் வரை செல்லும் தாம்பரம்- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16751) தாம்பரத்தில் இருந்து இரவு 9.02 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் இன்று முதல் நவீன மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ராமேசுவரம்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 16752) ஜனவரி மாதம் 3-ந் தேதியில் இருந்து நவீன மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
இந்த ரெயிலில் 1 ஏசி முதல் வகுப்பு பெட்டி, 1 ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 4 ஏசி மூன்றடுக்கு பெட்டி, 10 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி,1 இரண்டாம் வகுப்புமாற்றுத்திறனாளி பெட்டி மற்றும் 1 பொருட்கள் கொண்டு செல்லும் பெட்டி ஆகியவை இணைத்து இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.