5 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
5 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்
Published on: 

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் தவிக்கும் ராமேசுவரம் மீன வர்களை விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம் விசைப்படகு மீன வர்களுடன் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். 5 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர். 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை பல வகையான மீன்களுடன் கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com