ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
Published on

சென்னை,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீனவர்களின் போராட்டம் குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:- "ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது. மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்" என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com