

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேசுவரத்துக்கு (வண்டி எண்.07355), சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 7-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை), ராமேசுவரத்தில் இருந்து ஹூப்ளி வரும் சிறப்பு ரெயில் (07356), வருகிற ஜூன் 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை) நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.