ரம்ஜான் பண்டிகை: சென்னை - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இரண்டு சிறப்பு விரைவு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மார்ச் 30, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11.20 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணியளவில் போத்தனூர் சென்றடையும்.

போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் (எண்: 06028) சிறப்பு ரெயில் மார்ச் 31, 2025 (திங்கட்கிழமை) அன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 20.03.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்குத் தொடங்கும். இந்த ரெயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com