ரம்ஜான் பண்டிகை: சென்னை - குமரி இடையே சிறப்பு ரெயில் -முன்பதிவு தொடங்கியது

சென்னையில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு இன்று மாலை 6 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.
ரம்ஜான் பண்டிகை: சென்னை - குமரி இடையே சிறப்பு ரெயில் -முன்பதிவு தொடங்கியது
Published on

சென்னை,

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எழும்பூரில் இருந்து 20-ந் தேதி (நாளை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06045) மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து 22-ந் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06046) மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும். 18 தூங்கும் வசதி பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் கொண்ட இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னையில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு இன்று மாலை 6 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com