பிறை தென்பட்டது... நாளை ரம்ஜான் பண்டிகை - தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். ரம்ஜான் பண்டிகையானது, இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ரமலான் மாத பிறை தேட வேண்டிய நாளான 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமலான் மாதம் நிறைவுபெற்று 30/03/2025 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபிலிருந்து ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

சில அரபு நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com