ராணிப்பேட்டை: தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

அரக்கோணம் அருகே பள்ளி மாணவர்களை அழைத்து வர சென்ற பஸ் திடீரென தீப்பித்து எரிந்தது.
ராணிப்பேட்டை: தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

அரக்கோணம்,

ராணிப்பேட்டை, அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பள்ளியில் இருந்து பஸ்கள் இயகப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அப்பள்ளியை சேர்ந்த பள்ளி வாகனம் ஒன்று சேத்தமங்கலத்தில் 4 மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பொது திடீரென பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதை அறிந்த டிரைவர் 4 மாணவர்களையும் உடனடியாக கீழே இறக்கி இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணப்புத்துறையினர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com