ராணிப்பேட்டை: ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து - பெண் உள்பட இருவர் பலி

பெண் ஊழியர் மற்றும் கடை உரிமையாளர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராணிப்பேட்டை: ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து - பெண் உள்பட இருவர் பலி
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேவி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் உடல் கருகி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையின் ஷட்டர் மூடப்பட்டிருந்த நிலையில் அதனை உடைத்து, உள்ளே சிக்கி இருந்த இருவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெண் ஊழியர் சுந்தரி மற்றும் கடை உரிமையாளர் பவன்லால் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com