ராணிப்பேட்டை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

தாய், தந்தையின் மறைவால் இளம்பெண் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுவேதா (22 வயது), பட்டதாரியான இவர் படித்துமுடித்து வீட்டில் இருந்துள்ளார். இவரது தந்தை எழில்மாறன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும், தாய் 6 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்து விட்டனர். இதனால் சுவேதா நெமிலியில் உள்ள தனது சித்தப்பா நந்தகுமார் (45 வயது), வீட்டில் அவரது அரவணைப்பில் வளர்ந்து வந்தார். மேலும் காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிப்பட்டு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

சுவேதா தனது தாய், தந்தை இருவரின் மறைவால் தனிமையில் இருப்பதாக எண்ணம் தோன்றியதால் அடிக்கடி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாகாணிப்பட்டு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சுவேதா வந்தார். அப்போது அங்கு தாய் மற்றும் தந்தை குறித்து பேசியதால் மனமுடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிணற்றில் பிணமாக மிதந்த சுவேதாவை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நந்தகுமார் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com