பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ந்தேதி வெளியிடப்படும் - அமைச்சர் அறிவிப்பு

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் ஜூலை 1-ந்தேதி அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ந்தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை – 2026 (TNEA-2026)-க்கான தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

CBSE–யின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 21.06.2026 அன்று வெளிவந்த நிலையில் 29.06.2026-ல் வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும். மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் அன்று அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு (Grievance Redressal) காலம் 01.07.2026 முதல் 05.07.2026 வரை வழங்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை (TFCs) நேரில் அணுகலாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com