ரேபிடோ பைக் மீது கார் மோதி விபத்து: ஐடி பெண் ஊழியர் மரணம்

ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் கோமதி.
ரேபிடோ பைக் மீது கார் மோதி விபத்து: ஐடி பெண் ஊழியர் மரணம்
Published on

சென்னை,

சென்னையில் மொபைல் செயலி மூலம் உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி உள்ளது. பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்திற்கும் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

ரேபிடோ பைக்

இந்தநிலையில், சென்னையில் ரேபிடோ (Rapido) பைக் சேவை மிகவும் பிரபலமாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் விரைவான போக்குவரத்துக்கு இது உதவுகிறது.

இருசக்கர வாகனத்தில் தாங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும் இந்த வசதி பிரபலம் ஆகி வருகிறது. சென்னையில் எந்த பகுதியில் இருந்தும் தனிநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அழைத்துச் செல்வார்.

இதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்தி வருகின்றனர் அதிகாலை முதல் இரவு வரை இந்த வசதி கிடைக்கிறது.

ஐ.டி. பெண் ஊழியர்

இந்தநிலையில், சென்னை வானகரத்தில் ரேபிடோ பைக் டேக்ஸி மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில், பைக்கில் பயணித்த பெண் ஐடி ஊழியர் கோமதி (31) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ரேபிடோ ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கோமதி ரேபிடோ பைக் மூலம் அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது, பைக் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com