பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ `டூம்ஸ்டே மீன்'; பேரழிவுக்கான அறிகுறியா?

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ `டூம்ஸ்டே மீன்' சிக்கியது. ஆழ்கடலில் மட்டுமே வாழும் இந்த மீன்கள் சிக்கியிருப்பது மீனவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் அரியவகை டூம்ஸ்டே மீன் ஒன்று சிக்கி இருந்தது. இது சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இந்த வகை மீன்களை ஆசிய கடல் பகுதிகளில்தான் காண முடியும் எனவும், மிகவும் ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.
டூம்ஸ்டே மீன் பிடிபட்டால் உலகில் எங்காவது பேரழிவு ஏற்படக்கூடும் என்பது ஜப்பானிய மக்களின் ஒருவித நம்பிக்கை ஆகும். ஆனால் இது மூடநம்பிக்கை என்ற கருத்தும் உள்ளது. இந்தநிலையில் பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கி இருக்கும் டூம்ஸ்டே மீன் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி உள்ளது. ஆனால் இந்த அரிய வகை மீன் மிக குறைந்த விலைக்கே விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.






