ராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு16 வாகனங்களுக்கு தகுதிசான்று ரத்து

ராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு16 வாகனங்களுக்கு தகுதிசான்று ரத்து
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யப்பட்டது. 33 பள்ளிகளை சேர்ந்த 284 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன. 16 வாகனங்களுக்கு தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வில் துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், உதவி கலெக்டர் சரவணன், மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் கணேசன், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர்.

தீயணைப்பு துறையினர் தீயணைப்பான் கருவியை பயன்படுத்தும் முறை பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். போக்குவரத்து துறையின் சார்பில் பள்ளி வாகன டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. மற்றும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com