சென்னையில் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்

சென்னையில் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம் நாளை நடக்கிறது.
சென்னையில் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்
Published on

பொதுவினியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்வு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

அப்போது, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை ஆகிய மனுக்கள் பதிவு செய்யப்படும். ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் எதாவது இருந்தால் அவற்றையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com