சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்

சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்
Published on

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜனவரி மாதத்தின் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com