புதரில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

புதரில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பெங்களூருவுக்கு கடத்துவதற்காக புதரில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ரோட்டில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காடுசெட்டிப்பட்டி, பாகலஅள்ளி ரோட்டோரம் இருந்த புதரில் 69 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பாலக்கோடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். அலுவலர்கள் நடத்திய விசாரணையில் பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கியது தெரியவந்தது. இந்த அரிசியை பதுக்கியவர்கள் குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Dailythanthi
www.dailythanthi.com