ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பாவூர்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Published on

பாவூர்சத்திரம்:

நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார், கீழப்பாவூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து லோடு வேன் டிரைவரான கீழப்பாவூரைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் 440 கிலோ ரேஷன் அரிசியுடன் லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com