ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Published on

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரன் தலைமையில் போலீசார் அம்பை அருகே உள்ள பொட்டல் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் 26 மூடைகளில் 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com