ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சுரண்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Published on

தென்காசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுரண்டை துவரங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மொபட்டில் 3 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் விக்கிரமசிங்கபுரம் தாலுகா வெள்ளக்கால் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 105 கிலோ அரிசி, மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com