ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Published on

கோவை

கோவை மேற்கு மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான தனிப்படை போலீசார், அவினாசி ரோடு நீலாம்பூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு ஆம்னி வேனில் நடத்தப்பட்ட சோதனையில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளாணைப்பட்டியை சேர்ந்த பாபு (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 8 வழக்குகள் உள்ளன. தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com