ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தென்காசி அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Published on

குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் தென்காசி ஊர்மேலழகியான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மொபட்டில் 2 மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக மேலப்பாவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த இருளப்பன் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com