ரேஷன் அரிசி கடத்தியவர் பிடிபட்டார்

புளியரையில் லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்தியவர் பிடிபட்டார்
Published on

குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கோட்டை செக்கடி தெரு பகுதியை சேர்ந்த துரை (வயது 44) லோடு ஆட்டோவில் 150 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துரையை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com