ரேஷன் அரிசி கடத்தியவர் பிடிபட்டார்

சங்கரன்கோவிலில் ரேஷன் அரிசி கடத்தியவர் பிடிபட்டார்.
ரேஷன் அரிசி கடத்தியவர் பிடிபட்டார்
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் சங்கரன்கோவில் களப்பகுளத்தை சேர்ந்த சந்தனபாண்டி (வயது 55) என்பதும், அவர் மூட்டையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிலோ ரேஷன் அரிசி, மொபட்டை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com