ரேஷன் கடை திறப்பு விழா

விக்கிரமசிங்கபுரம் அருகே பசுக்கிடைவிளையில் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
ரேஷன் கடை திறப்பு விழா
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 8-வது வார்டு பசுக்கிடைவிளையில் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கடையை திறந்து வைத்து பயனாளிக்கு ரேஷன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். விழாவில் அம்பாசமுத்திரம் யூனியன் தலைவர் பரணி சேகர், நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com