ரேஷன் கடை விற்பனையாளர் வேன் மோதி பலி

ரேஷக் கடை விற்பனையாளர் வேன் மோதி பலியானார். விபத்தில் மகன் இறந்த 65 நாட்களில் தாயும் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ரேஷன் கடை விற்பனையாளர் வேன் மோதி பலி
Published on

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமம் நடுவீதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் ஆத்தூர் தலைமை தபால் நிலையத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 48). இவர் ஆத்தூர் ஜோதி நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1-ந் தேதி மதியம் 12 மணிக்கு தனது ஸ்கூட்டரில் ஆத்தூர் அருகே வளையமாதேவி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மணிமேகலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வெங்கட்ராமன், மணிமேகலை தம்பதியின் மூத்த மகன் கோபி என்பவர் இதே ரோட்டில் கடந்த 26.10.2022 அன்று மொபட்டில் சென்ற போது மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார். அவர் இறந்து 65 நாட்களில் அவரது தாயாரும் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com