தீபாவளியை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் - உணவுத்துறை அறிவிப்பு

பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com