தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் - உணவுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி ஆயுத பூஜை மற்றும் 20-ந்தேதி சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ration shop
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (திங்கள் கிழமை) ஆயுத பூஜை மற்றும் 20-ந்தேதி (செவ்வாய் கிழமை) சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை ஊழியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதற்கு முந்தையை விடுமுறை தினமான 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வசதியாக அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதை ஈடுகட்டும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி விடுமுறை நாளாக உணவுத்துறை அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com