"தமிழகத்தின் மீதான பாஜகவின் நோக்கங்களுக்கு ஆர்.என். ரவி ஒரு சாட்சி" - திமுக எம்.பி. வில்சன் விமர்சனம்.

மேற்கு வங்க மக்களுக்காகவும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் உள்ள எனது நல்ல நண்பர்களுக்காகவும் நான் வருந்துகிறேன் என வில்சன் கூறியுள்ளார்.
"தமிழகத்தின் மீதான பாஜகவின் நோக்கங்களுக்கு ஆர்.என். ரவி ஒரு சாட்சி" - திமுக எம்.பி. வில்சன் விமர்சனம்.
Published on

சென்னை,

ஆர்.என். ரவி கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழக கவர்னராக பதவி வகித்து வருகிறார், தமிழக ஆளுநருக்கும் மாநில அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் போக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக, கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் பல்வேறு அரசியல் சர்ச்சைகளையும் சட்டப் போராட்டங்கள் போன்ற பல பிரச்சினைகள் நிறைந்த  காலமாக அமைந்தது.

நேற்று நள்ளிரவில் நடந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் தி.மு.க எம்.பி. பி.வில்சன், தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பாஜகவின் நோக்கங்களை தொடர்ந்து நினைவூட்டுவது மற்றும் அவர் எங்கு சென்றாலும் அரசியலமைப்புச் சட்டம் பலியாகிவிடும் என விமர்சனம் செய்துள்ளார்.

ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய ஆளுநர் என்ற அறிவிப்பை தொடர்ந்து பி.வில்சன் சமுக வளைதலத்தில் நையாண்டி தனமாக பதிவிட்டுள்ளார்:

நான் இரண்டு விஷயங்களில் சோகமாக இருக்கிறேன். அதில் முதலாவதாக வரவிருக்கும் தமிழக தேர்தல்களில் திமுக ஒரு நட்சத்திர பேச்சாளரை இழக்கிறது. இரண்டாவதாக, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் உள்ள எனது நல்ல நண்பர்களுக்காகவும், மற்றும் மேற்கு வங்க மக்களுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன்.

மேலும் ஆர்.என்.ரவி எங்குச் சென்றாலும், அங்கு அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி அமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகியவையே பலியாகிவிடும் என்று ஆர்.என். ரவியை கடுமையாக சாடி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com