ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் பெரிய கருப்பன்

கோப்புப்படம்
நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை
தீவுத்திடல் சத்தியவாணி முத்து நகரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாக இடத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதாவது:-
நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது. ரிசர்வ் வங்கி விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகை கடன் தரப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






