வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் ஆர்.சி.பால்கனகராஜ் வெற்றி - அண்ணாமலை வாழ்த்து

இவர், பா.ஜ.க. மாநில துணைத் தலைவராகவும், வழக்கறிஞர் அணியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் ஆர்.சி.பால்கனகராஜ் வெற்றி - அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை,

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.சி.பால்கனகராஜ் வெற்றி பெற்றுள்ளார். இவர், பா.ஜ.க. மாநில துணைத் தலைவராகவும், வழக்கறிஞர் அணியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.சி.பால்கனகராஜுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் ஆர்.சி.பால்கனகராஜுக்கு, இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் ஆர்.சி.பால்கனகராஜ், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com